இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 9:29PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் டி64 ஓட்டப்பந்தய பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற பிரணவ் தேசாய்க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரணவ் தேசாய் திறமைக்கு அவர் வென்றுள்ள வெண்கலப் பதக்கம் மிகவும் தகுதியானது என்றும், அவரது வேகம், அர்ப்பணிப்பு, உறுதித்தன்மை ஆகியவை உண்மையிலேயே பாராட்டுக்குரியவை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
‘பிரணவ் தேசாயின் சிறப்பான ஓட்டத்திற்கு கிடைத்த தகுதியான வெண்கலப் பதக்கம். 2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் டி64 ஓட்டப்பந்தய பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற பிரணவ் தேசாய்க்கு வாழ்த்துக்கள். அவருடைய வேகம், அர்ப்பணிப்பு, உறுதித்தன்மை ஆகியவை உண்மையிலேயே பாராட்டுக்குரியவை”.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326258®=3&lang=1
***
TV/LN/SH