இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 6:56PM by PIB Chennai
நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும், மண் வளத்தை மேம்படுத்தவும், வேளாண் வளங்களை விவேகத்துடன் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், 2026 அக்டோபர் 22 முதல் நவம்பர் 30, வரை நாடு தழுவிய ‘பண்ணைப் பாதுகாப்புத் திட்டம் – ரபி 2026’ என்ற இயக்கத்தைத் தொடங்கவுள்ளது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், ஹரியானாவின் கர்னாலில் இந்த இயக்கத்தைத் தொடங்கி வைப்பார்.
இந்த முன்முயற்சியின் மூலம், மண் மற்றும் நீரின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், திறமையான, செலவு குறைந்த வேளாண் நடைமுறைகளை ஊக்குவிக்கவும், வேளாண்மையில் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், விவசாயிகளின் நீண்டகால செழிப்புக்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவை அடையும் தொலைநோக்குப் பார்வைக்கும் பங்களிக்க அரசு முயல்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326112®=3&lang=1
TV/BR/SH