இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 7:06PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான -67 கிலோ எடைப் பிரிவில் அபாரமான முறையில் பளுதூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று, இப்பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த கஸ்தூரி ராஜாமணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது இந்திய பாரா பளுதூக்குதல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றும், அவரது விடாமுயற்சியும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பும் இந்தச் சாதனையை உண்மையிலேயே சிறப்புமிக்கதாக ஆக்கியுள்ளன என்றும் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, கஸ்தூரிக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
"இந்திய பாரா பளுதூக்குதலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்!
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான -67 கிலோ எடைப் பிரிவில் கஸ்தூரி ராஜாமணி தமது அபாரமான முயற்சியால் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தப் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்! அவரது விடாமுயற்சியும், சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பும் இந்தச் சாதனையை உண்மையிலேயே சிறப்பானதாக ஆக்கியுள்ளன. கஸ்தூரிக்கு வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி"
(Release ID : 2326119)
TV/PLM/SH