பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மன்ஜீத்துக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 6:59PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்12/எஃப்13 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மன்ஜீத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்ததிலிருந்து, 2026-ல் வெள்ளிப் பதக்கம் வெல்லும் அளவுக்கு மன்ஜீத் அடைந்துள்ள மகத்தான வளர்ச்சிப் பயணத்தைக் குறிப்பிட்டுள்ள திரு மோடி, அவரது வெற்றியானது அவரது கடின உழைப்பு, லட்சியம், அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகிறது என்றும், வரும் காலங்களிலும் அவர் தொடர்ந்து இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

 

"மன்ஜீத்தின் முன்னேற்றப் பயணம் அற்புதமானது! கடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்ததிலிருந்து, 2026-ல் வெள்ளிப் பதக்கம் வென்றது வரை, ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்12/எஃப்13 பிரிவில் அவர் மகத்தான முன்னேற்றம் கண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். அவரது இந்த வெற்றியானது, அவரது கடின உழைப்பு, லட்சியம், அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகிறது. வரும் காலங்களிலும் அவர் இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பார் என நம்புகிறேன்: பிரதமர் நரேந்திர மோடி"

 

(Release ID : 2326113)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326833) வருகையாளர் எண்ணிக்கை : 9