இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 7:30PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 100 மீட்டர் டி47 பிரிவில், மிகச் சிறந்த வேகத்துடன் பந்தயத்தை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்ற திலீப் காவிட்டிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மின்னலுக்கு இணையான அவரது வேகமும் திறமையும் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, இந்த மகத்தான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், வரும் காலங்களிலும் அவர் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று வாழ்த்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் திலீப் காவிட் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆடவர் 100 மீட்டர் டி47 பிரிவில், அபாரமான வேகத்துடன் அவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அவரது மின்னல் வேகமும் திறமையும் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளன. இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள திலீப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். தனது எதிர்கால முயற்சிகளிலும் அவர் வெற்றிகளைக் குவித்திட வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326138®=3&lang=1
***
TV/BR/SH