PIB Backgrounder
azadi ka amrit mahotsav

பிரதமரின் சமூக உதவித் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 2:17PM by PIB Chennai

பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, 2026 அக்டோபர் 14 அன்று, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறையின் தேசிய சமூக உதவித் திட்டத்தை, அக்டோபர் 2026-27 முதல் 2030-31 வரை, ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. இதற்கென  53,428 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவதாக, இத்திட்டத்திற்கும், அதன் துணைத் திட்டங்களுக்கும் புதிய பெயர்களை வழங்குதல், இரண்டாவதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் திருத்தம் செய்தல், இறுதியாக, பிற துணைத் திட்டங்களை, ஏற்கனவே உள்ள வடிவிலேயே தொடர்ந்து செயல்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

இத்திட்டத்தின் கீழ் உள்ள நான்கு ஓய்வூதியத் துணைத் திட்டங்களுக்கும் புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. முதியோர் ஓய்வூதியத் திட்டம் 'பிரதமரின் மூத்தகுடிமக்கள் (விருதாவஸ்தா) ஓய்வூதியத் திட்டம்' என்றும், விதவை ஓய்வூதியத் திட்டம் 'பிரதமரின் கைம்பெண் (விதவா) ஓய்வூதியத் திட்டம்' என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் 'பிரதமரின் மாற்றுத்திறனாளிகளுக்கான (திவ்யாங்ஜன்) ஓய்வூதியத் திட்டம்' என்றும் அழைக்கப்படும். குடும்ப நலத் திட்டம் என்பது 'பிரதமரின் குடும்ப நலத் திட்டம்' என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் மற்றும் குடும்ப நலத் திட்டம் ஆகியவை தற்போதுள்ள அதே வடிவில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை, அதன் தகுதிகள் வழங்கப்படும் உதவித்தொகை ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய சமூக உதவித் திட்டம் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-அன்று தொடங்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 41-வது பிரிவைச் செயல்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு, வேலைவாய்ப்பின்மை, முதுமை, நோய், உடல் பாதிப்பு போன்ற சூழல்களில், மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் ஒரு திட்டமாகும். இதில், 100 சதவீத உதவி, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதன் மூலம், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நபர், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் குறைந்தபட்ச உதவியைப் ளபெறுவதை இது உறுதி செய்கிறது. இத்திட்டம் கிராமப்புறம், நகர்ப்புறம் என இரு பகுதிகளையும் உள்ளடக்கியது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ன் படி, 80 சதவீத பாதிப்பு என்ற அளவுகோலுக்கு மாற்றாக, இனி 40 சதவீத பாதிப்பு என்ற அளவுகோல் பயன்படுத்தப்படும். இதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு வரையறை நீக்கப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகள் பிறந்தது முதல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி படைத்தவராகக் கருதப்படுகிறார்கள். மத்திய அரசின் உதவித்தொகை, 79 வயது வரை உள்ளவர்களுக்கு, மாதந்தோறும் ரூ 375, 80 வயது, அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மாததந்தோறும் ரூ 625 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 8.33 லட்சத்திலிருந்து 27.48 லட்சமாக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326529&reg=3&lang=1

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326735) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati