உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் ஏக்தா நகரில் 31-ம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார் : மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன்

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 8:17PM by PIB Chennai

குஜராத்தின் ஏக்தா நகரில் 2026 அக்டோபர் 31-ல் நடைபெறவுள்ள தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்கள் தொடர்பாக, மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் இன்று (21.10.2026) புது தில்லியில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார் .

ஊடகங்களுக்கு விளக்கமளித்த மத்திய உள்துறை செயலாளர், இந்த ஆண்டுக்கான ஒற்றுமை அணிவகுப்பு மிகவும் உயிரோட்டமாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும் என்று கூறினார். இதன் முக்கிய நிகழ்ச்சி 2026 அக்டோபர் 31 அன்று தொடங்கும் எனவும். பிரதமர் திரு நரேந்திர மோடி காலையில் ஒற்றுமைச் சிலையில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்றும் அவர் தெரிவித்தார். ஒற்றுமை அணிவகுப்பு மாலையில் நடைபெறும் என்று அவர் கூறினார். 2026-ல் இந்தியாவை ஆயுதமேந்திய நக்சலிசத்திலிருந்து விடுவித்த மாபெரும் சாதனையை இந்த அணிவகுப்பு முன்னிலைப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏக்தா நகரில் நடைபெறும் தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டங்கள் இரண்டு நோக்கங்களைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன என்று திரு கோவிந்த் மோகன் கூறினார். முதல் நோக்கம், நாட்டின் காவல் படைகள் ஆற்றிவரும் சிறந்த பணிகளை தேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகும் என அவர் கூறினார். இரண்டாவது நோக்கம், ஏக்தா நகரின் உள்ளூர் சூழலைக் கண்டு ரசிக்கவும், அதன் அழகை அனுபவிக்கவும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்களை அழைப்பதாகும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326165&reg=3&lang=1

***

SK/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2326669) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati