இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 3:30PM by PIB Chennai
இந்திய ராணுவத்திற்கு மேம்படுத்தப்பட்ட தாழ் நிலை இலகு ரக ரேடார்களை கொள்முதல் செய்வதற்கான ரூ.770 கோடி ஒப்பந்தத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் (பெல்) பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. புதுதில்லியில் 2026 அக்டோபர் 21 அன்று பாதுகாப்புத் துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ரேடாரானது போர் விமானத்தின் இலக்குகள், மிகச் சிறிய ட்ரோன்களை கண்டறிந்து கண்காணிக்கும் திறனைக் கொண்டதாகும். அத்துடன், வான்வழி இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கூடுதல் திறனையும் கொண்டுள்ளது. இது ஆளில்லா வான்வழி அமைப்புகளில் அச்சுறுத்தலை ராணும் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும். வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வைக்கேற்ப இக்கொள்முதல் வான்வழிப் பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்வதற்கான குறிப்பிடத்தக்க அம்சமாகும். இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் உட்பட இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடச் சூழலுக்கு ஊக்கமளிப்பதுடன் தன்னிறைவு அடைந்த உலக அளவில் போட்டியிடக்கூடிய பாதுகாப்பு தளவாடத் தொழில்துறையை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.
***
(Release ID: 2325933)
SK/IR/SU