பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ராணுவ தளபதிகளுக்கான மாநாடு தொடக்கம்: ராணுவத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 3:06PM by PIB Chennai

மத்திய பாதுகாப்பு துறை சார்பில், இந்திய ராணுவத் தளபதிகளுக்கான மாநாடு 2026 அக்டோபர் 21 முதல் 23-ம் தேதி வரை புதுதில்லியில் நடைபெறுகிறது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு சூழல், ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் தயாராகுதல், எதிர்காலத்திற்கான திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட உள்ளன. இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்ற உள்ளார். ராணுவம், கடற்படையின் உயர் அதிகாரிகள், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, ராணுவத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தங்களது கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்.

குறிப்பாக, தரைப்படை கோட்பாடு குறித்த புத்தகத்தை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட உள்ளார். இதில், எதிர்காலத்தில் போர் சூழலில் இந்திய ராணுவ எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வது குறித்த நெறிமுறைகள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐநா அமைதிப்படையில் சிறந்த பங்களிப்பு செய்த இந்திய வீரர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவுரவிக்க உள்ளார். விமானப் படையில் பாதுகாப்பை மேம்படுத்தியவர்கள், பசுமை ராணுவ தளங்கள் அமைக்க பங்களிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்க உள்ளார். இந்திய ராணுவத்தை தொழிநுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325911&reg=3&lang=1

***

SK/LN/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2326532) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati