மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மீன்வள முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 8:16AM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 2026 அக்டோபர் 23 அன்று மீன்வள முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2026-ஐ நடத்துவதற்கு மத்திய அரசின் மீன்வளத்துறையும், மத்தியப் பிரதேச மீன்வளத்துறையும் ஏற்பாடு செய்துள்ளன. உள்நாட்டு மீன்வள உற்பத்திக்கும், முதலீடு, பதனப்படுத்துதல், குளிரூட்டல் உள்கட்டமைப்பு, மதிப்புக்கூட்டல், ஏற்றுமதி சந்தைகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவது இம்மாநாட்டின் நோக்கமாகும்.

இது உற்பத்தியை மட்டும் நோக்கமாகக் கொண்ட அணுகுமுறையில் இருந்து மாறாக ஒருங்கிணைந்த மதிப்பு சார்ந்த மாதிரியை நோக்கி செல்ல ஊக்குவிக்கிறது. மீனவர்கள், மீன் விவசாயிகள் ஆகியோருக்கான சந்தைவாய்ப்புகளை மேம்படுத்துவதிலும், வருவாயை அதிகரிப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது.

இம்மாநாட்டில் முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்கள், மீனவர்கள், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் விவசாயிகள், மீன்வளக் கூட்டுறவு சங்கங்கள், மீன் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில்முனைவோர்கள், புத்தொழில் நிறுவனங்கள், பதனப்படுத்துவோர்கள், நிதி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், இதர பங்குதாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326360&reg=3&lang=1

***

SS/IR/RJ/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2326485) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati