பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரீத்தி பாலுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 7:13PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரீத்தி பாலுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் அவர் தனது சிறப்பான பயணத்தை நிறைவு செய்துள்ளதைக் குறிப்பிட்ட திரு மோடி, 100 மீட்டர்,  200 மீட்டர் போட்டிகளில் அவர் அடைந்துள்ள வெற்றி, அவரது அபரிமிதமான முன்னேற்றம், வியக்கத்தக்க வேகம் மற்றும் தளராத உறுதியைக் எடுத்துரைக்கிறது என்று கூறியுள்ளார். இடைவிடாத முயற்சி,  தன்னம்பிக்கை மூலம் எத்தகைய சாதனைகளைச் செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளதாகவும், அவரது இந்த வெற்றிகளைக் கண்டு இந்தியா பெருமிதம் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

 

"இரண்டு பந்தயங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள்! 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பிரீத்தி பால் தனது பயணத்தை மிகச் சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.

பெண்களுக்கான 100 மீட்டர் டி35 பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று, மீண்டும் ஒரு அற்புதமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 100 மீட்டர்,  200 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அவர் பெற்றுள்ள வெற்றி, அவரது அபரிமிதமான முன்னேற்றம், வியக்கத்தக்க வேகம்,  தளராத உறுதியைக் காட்டுகிறது. தொடர்ச்சியான முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பிரீத்தி நிரூபித்துள்ளார். அவரது சாதனைகளை இந்தியா கொண்டாடுகிறது: பிரதமர் @narendramodi”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326123&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326282) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam