பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகமது யாசருக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 6:46PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் எஃப்46 பிரிவில், சிறந்த எறிதலுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற முகமது யாசருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த போட்டியில் இருந்து அவரது பயணம், பல ஆண்டுகால விடாமுயற்சி, கடின உழைப்பு, தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற உறுதியைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, இந்தச் சிறந்த செயல்பாட்டிற்காக முகமது யாசரைப் பாராட்டியுள்ளதோடு, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், முகமது யாசர் ஆடவர் குண்டு எறிதல் எஃப்46 பிரிவில் சிறந்த எறிதலுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்று, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார். கடந்த போட்டியிலிருந்து அவரது பயணம், பல ஆண்டுகால விடாமுயற்சி, கடின உழைப்பு, தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற உறுதியைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பாராட்டத்தக்க செயல்திறனுக்காக முகமது யாசருக்குப் பாராட்டுகளும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளும்: பிரதமர் நரேந்திர மோடி"
(Release ID : 2326103)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2326276)
வருகையாளர் எண்ணிக்கை : 8