பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டு போட்டி: வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராம் ரத்தன் சிங்கிற்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 9:25PM by PIB Chennai

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசியா பாரா விளையாட்டு போட்டி 2026-ல் ஆடவருக்கான வட்டு எறிதல் எஃப்5I/52/53 பிரிவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற ராம் ரத்தன் சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். பாரா தடகள போட்டியில் இந்தியா பெருமைகொள்ள மற்றுமொரு காரணம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், ராம் ரத்தன் சிங்-ன் முயற்சி, அவர் வெளிப்படுத்திய உறுதியை கண்டு பெருமிதம் கொள்வதாக  தெரிவித்தார். 

இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: “பாரா தடகளப் பிரிவில் இந்தியா பெருமை கொள்ள மற்றுமொரு காரணம் கிடைத்துள்ளது!

ராம் ரத்தன் சிங் ஆசிய பாரா விளையாட்டு போட்டி 2026ல், ஆடவருக்கான வட்டு எறிதல் எஃப்5I/52/53 பிரிவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ராம் ரத்தனின் முயற்சிகள், அவர் வெளிப்படுத்திய உறுதியை கண்டு பெருமிதம் கொள்கிறேன்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325603&reg=3&lang=1

***

SS/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326106) வருகையாளர் எண்ணிக்கை : 10