இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2026 7:44PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்ருஷ்டி அரோராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தமது முதல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலேயே ஸ்ருஷ்டி வென்றுள்ள இந்தப் பதக்கம், ஒரு மிகச்சிறந்த துவக்கமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, அவர் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், அவருக்குத் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
"தன்னுடைய முதல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற ஸ்ருஷ்டி அரோரா, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்தப் பதக்கம் ஒரு மிகச்சிறந்த துவக்கமாக அமைந்துள்ளது. ஸ்ருஷ்டி, தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்குப் பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325519®=48&lang=2
***
AD/RB/RJ