பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ் 13 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி கே. புதிகினாவிற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 10:11PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ் 13 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி கே. புதிகினாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது மன உறுதி, கடின உழைப்பு,  விளையாட்டு உணர்வைப் பாராட்டிய திரு மோடி, இந்தச் சாதனையை நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தருணம் என்று குறிப்பிட்டார். மேலும், ரவி கே. புதிகினா வரும் காலங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

“இந்தியாவுக்கு ஒரு சிறப்பான வெள்ளிப் பதக்கம்! 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்13 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி கே. புதிகினாவுக்கு வாழ்த்துகள். அவரது மன உறுதி, கடின உழைப்பு,  விளையாட்டு உணர்வு ஆகியவை மிகவும் பாராட்டுக்குரியவை. ஒட்டுமொத்த நாட்டிற்கும்  பெருமை சேர்க்கும் தருணமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. அவர் வரும் காலங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325316&reg=3&lang=1

****

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325469) வருகையாளர் எண்ணிக்கை : 4