தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

மைகவ் தளத்துடன் இணைந்து நடத்திய இணைய வழி விநாடி வினா போட்டியின் 10 வெற்றியாளர்களை அறிவித்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 12:02PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம், தனது 33-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, மைகவ் தளத்துடன் இணைந்து 2026 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 10 வரை ஏற்பாடு செய்திருந்த இணைய வழி விநாடி வினா போட்டியின் 10 வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. இந்த விநாடி வினா போட்டி, மனித உரிமைகள், 1993-ம் ஆண்டின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகள், அதிகாரங்கள், கடமைகள் ஆகியவை பற்றி அனைவரையும் அறிந்துகொள்ளச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

ரூ.15,000/- மதிப்புள்ள முதல் பரிசை செல்வி ஆர்த்தி மகாஜன் வென்றுள்ளார்.

இந்த விநாடி வினா போட்டியில் நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மாநில வாரியான பங்கேற்பில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவை முதலிடம் பிடித்தன.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2325012&reg=3&lang=1

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325203) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Gujarati , Urdu , हिन्दी , Marathi