இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்டுள்ள உதவித் திட்டத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 4:50PM by PIB Chennai

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவித் திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, 2026-27 முதல் 2030-31 வரையிலான காலத்திற்கு (16-வது நிதி ஆணையச் சுழற்சி) ரூ 7,386.74 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில், இந்தத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட உதவி விதிமுறைகளை உள்ளடக்கிய செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்குத்  தயாராகும் வகையில், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு உதவிடும் வகையில் முதன்மை வழிமுறையாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய பயிற்சி முகாம்களை நடத்துதல், பயிற்சி மையங்களில் (அகாடமிகள்) பயிற்சி அளித்தல், விளையாட்டு வீரர்களுக்குத் தங்குமிடம், உணவு, விளையாட்டு உபகரணங்கள், காப்பீடு மற்றும் விளையாட்டு அறிவியல் சேவைகளை வழங்குதல் போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், உயர் செயல்திறன் இயக்குநர்கள் மற்றும் இயன்முறை நிபுணர்கள், விளையாட்டு விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்ற பணியாளர்களை நியமித்தல், சர்வதேசப் பயிற்சி மற்றும் போட்டிகள் மூலம் வெளிநாடுகளில் அனுபவம் பெறுதல், சீனியர், இளையோர் மற்றும் துணை-இளையோர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துதல், அடிப்படை நிலையில் இளம் விளையாட்டு வீரர்களை மேம்படுத்துதல், மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு நிர்வாகம் சார்ந்த ஆதரவை வழங்குதல் போன்றவை இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324383&reg=3&lang=1    

***

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2324921) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu