ஆயுஷ்
azadi ka amrit mahotsav

உலக மாதவிடாய் நிறுத்தம் தினம் 2026: மாதவிடாய் ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதம் முழுமையான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2026 6:07PM by PIB Chennai

அக்டோபர் 18 அன்று உலக மாதவிடாய் நிறுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாதவிடாய் நிறுத்த காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு,  பராமரிப்பு, விரிவான அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை ஆயுஷ் அமைச்சகம் எடுத்துரைக்கிறது. மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், உடல்நலம், மன நலம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மாதவிடாய் கால ஆரோக்கியம் குறித்த சிறந்த புரிதலை மேம்படுத்த இந்த அமைச்சகம் முயல்கிறது.

 

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு இயற்கையான உயிரியல் நிலையாகும். இது பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் ஏற்படுகிறது. மாதவிடாய் முடிந்து ஒரு வருடம் வரையிலான காலகட்டமே பெரிமெனோபாஸ் எனப்படுகிறது.

மாதவிடாய் நிறுத்தத்திற்கான இந்த மாற்றத்தின்போது, ஒழுங்கற்ற மாதவிடாய், உடலில் வெப்பநிலை அதிகரித்தல் தூக்கக் கோளாறுகள், மனநிலை மாற்றங்கள், மூட்டு வலி, பதற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல், உளவியல் மாற்றங்கள் ஏற்படலாம். ஆயுர்வேதத்தில், இந்த காலகட்டத்துடன் தொடர்புடைய அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன.

 

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா இது குறித்துக் கூறுகையில், ஆயுஷ் அமைச்சகம், இதில் ஆராய்ச்சிகளையும் அறிவியல் ரீதியான அணுகுமுறையை வலுப்படுத்துவதிலும் உறுதியாக உள்ளது என்றார்.

 

மேலும் தகவலுக்கு, மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் நோய்க்குறி (Menopausal Syndrome) குறித்த வெளியீட்டை இந்த இணைய தள இணைப்பில் காணலாம்: https://ccras.nic.in/wp-content/uploads/2024/06/Menopausal-Syndrome.pdf

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324710&reg=3&lang=1

(Release ID : 2324710)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324744) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam