நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு குறித்த பயிலரங்கை நிதிச் சேவைகள் துறை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 5:00PM by PIB Chennai

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையானது, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், துறைசார் ஒழுங்குமுறை அமைப்புகள், பொதுத் துறை நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவது குறித்த இரண்டு நாள் பயிலரங்கை, 2026 அக்டோபர் 15, 16 தேதிகளில் பஞ்ச்குலாவில்  நடத்தியது.

 

பொதுத் துறை நிதி நிறுவனங்கள் முழுவதும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளைச் சீராகவும் திறம்படவும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைந்து இந்தப் பயிலரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இந்தப் பயிலரங்கில், நிதி சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மூத்த மனிதவள அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை- மேம்பாட்டு ஆணையம், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

 

ஒதுக்கீடு தொடர்பான செயல்பாட்டு வல்லுநர்கள் பயிலரங்கில் உரையாற்றினர். மேலும் ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதும் நடைமுறை அம்சங்கள் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324393&reg=3&lang=1

 

 

(Release ID : 2324393)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324703) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi