குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கோழிக்கோட்டில் நவராத்திரி சர்கோத்சவம் நிகழ்வைத் தொடங்கி வைத்தார் குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்
இந்தியாவின் பன்முக நாகரிகப் பாரம்பரியமே அதன் வலிமை : குடியரசு துணைத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 6:57PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (16.10.2026) கேரளாவின் கோழிக்கோட்டில் நவராத்திரி சர்கோத்சவம் 2026 நிகழ்வைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் அதே வேளையில், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நவராத்திரி என்பது படைப்பு, வலிமை, ஞானம், கருணையின் வடிவமான ஆதி பராசக்தியின் தெய்வீக பெண் சக்தியைக் கொண்டாடுகிறது என்று அவர் கூறினார். தைரியம் பயத்தை வெல்ல வேண்டும், நீதி அநீதியை வெல்ல வேண்டும், அறிவு அறியாமையை அகற்ற வேண்டும் என்பதும்தான் இந்த விழாவின் செய்தி என்று அவர் குறிப்பிட்டார். இந்த காலத்தால் அழியாத விழுமியங்கள், சமூகத்தை ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்துகின்றன என்று அவர் கூறினார்.
இந்தியாவின் பன்முக மரபுகளை எடுத்துரைத்த அவர், மொழிகள், மரபுகள், வழிபாட்டு முறைகளில் பன்முகத்தன்மை இருந்தபோதிலும், நாடு அதன் பகிரப்பட்ட நாகரிக பாரம்பரியத்தால் ஒற்றுமையாக இருக்கிறது என்றும் இதுவே வலிமை என்றும் கூறினார். இது, “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324497®=3&lang=1
(Release ID: 2324497)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324587)
வருகையாளர் எண்ணிக்கை : 14