நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கந்தா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அகர்தலாவுக்கு வெங்காயம் அனுப்பி வைப்பு - வடகிழக்குப் பகுதியில் வெங்காயம் கிடைப்பதை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 1:23PM by PIB Chennai
பண்டிகைக் காலத்தின்போது வெங்காயம் கிடைப்பதை வலுப்படுத்தவும், நியாயமான விலையை உறுதி செய்யவும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, நுகர்வோர் விவகாரங்கள் துறை, வெங்காய விநியோகத்தை விரிவுபடுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, திரிபுராவின் அகர்தலாவிற்கு முதல்முறையாக 'கந்தா எக்ஸ்பிரஸ்' ரயில் மூலம் வெங்காயம் அனுப்பப்படுகிறது. சுமார் 440 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றிச் செல்லும் இந்த ரயில், நாளை மறுநாள் (2026 அக்டோபர் 18) அகர்தலாவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கந்தா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அசாமிற்கு கூடுதல் கையிருப்பு வெங்காயங்கள் வெற்றிகரமாக அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அகர்தலாவுக்கு இந்த வெங்காயம் அனுப்பப்படுகிறது. இது வடகிழக்குப் பகுதியில் வெங்காய விநியோகத்தை மேலும் வலுப்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324270®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324287)
வருகையாளர் எண்ணிக்கை : 12