ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சைபர் பாதுகாப்பு, மின் சாதனக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிலரங்கிற்கு மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 11:42AM by PIB Chennai

தூய்மைப் பராமரிப்பிற்கான சிறப்பு பிரச்சார இயக்கம் 6.0-ன் ஒரு பகுதியாக, மின் சாதனங்களின் கழிவு மேலாண்மை, சைபர் பாதுகாப்பு, பாதுகாப்பான முறையில் மின்னணு சாதனைகளை அகற்றுதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பயிலரங்கிற்கு மத்திய ஜவுளி அமைச்சகம் 2026 அக்டோபர் 15 அன்று ஏற்பாடு செய்தது.

இந்தப் பயிலரங்கில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட 85-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தப் பயிலரங்கு பொறுப்பான முறையில் மின் சாதனங்களின் கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல், இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்துதல், பணியிடத்தில் பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324222&reg=3&lang=1   

***

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2324271) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu