இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன்களை உருவாக்கும் பணிகளை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 6:15PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில், இந்தியா நான்காம்  இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதில் கூடுதல் பொறுப்பு ஏற்குமாறு தேசிய விளையாட்டு சம்மேளனங்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய விளையாட்டு சம்மேளனங்களின் மறுஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் விளையாட்டுத் திறனைத் தக்கவைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன்களை உருவாக்கும் பணிகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு சம்மேளனமும் இதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்டு தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். திறமையான நபர்களைக்  கண்டறிந்து, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, விளையாட்டு வீரர்கள் மிக உயர்ந்த நிலையை எட்டுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். பல்வேறு விளையாட்டுச் சுழற்சிகளிலும், இந்தியா தொடர்ந்து பதக்கங்களை வெல்வதை உறுதிசெய்யும் வகையில், வீரர்களைக் கண்டறிந்தும் அவர்களது திறனை  மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா  எடுத்துரைத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324032&reg=3&lang=1

(Release ID: 2324032)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324155) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati