நிதி அமைச்சகம்
தேசிய நிலப் பணமாக்குதல் கழகம் நடத்திய முதல் மின்னணு நில விற்பனைக்கான ஏலம்:முதல் நாளில் ரூ 366.33 கோடி மதிப்பிலான 150 மனைகள் விற்பனை
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 1:28PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய நிலப் பணமாக்குதல் கழகம், விசாகப்பட்டினம் எஃகு ஆலையை நிர்வகிக்கும் ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் நிறுவனத்திற்குச் சொந்தமான உயர் மதிப்பு கொண்ட நிலங்களுக்கான மின்னணு ஏலத்தை நடத்தியது.
இதில், முதல் கட்ட ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலங்களில் 150 மனைகள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் மொத்த அடிப்படை விலை ரூ 312.48 கோடியாக இருந்த நிலையில், ஏலத்தின் மூலம் ரூ 366.33 கோடி மதிப்பில் ஏல நடைமுறைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
அடிப்படை விலையைக் காட்டிலும் சராசரியாக 17.23% கூடுதல் விலைக்கு ஏலங்கள் முடிந்துள்ளன. இதில் அதிகபட்ச விலை ஒரு சதுர யார்டுக்கு ரூ 1.80 லட்சத்தைக் கடந்துள்ளது. இத்தகைய வலுவான விலை நிர்ணயம், விசாகப்பட்டினத்தில் சிறந்த இடங்களில் அமைந்துள்ள நிலங்களுக்கான சந்தை தேவையை வெளிப்படுத்துகிறது. பொதுச் சொத்துக்களின் பொருளாதார ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவதில், வெளிப்படையான, போட்டித்தன்மை வாய்ந்த மின்னணு ஏல செயல்முறையின் முக்கியத்துவத்தை இது எடுத்துக் காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322696®=3&lang=1
***
SK/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324062)
வருகையாளர் எண்ணிக்கை : 15