புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை அடைவதற்கு வலுவான புள்ளிவிவர அமைப்புகள் அவசியம்: டாக்டர் பி கே மிஸ்ரா

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 12:40PM by PIB Chennai

ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டுவதற்கும், வலுவான புள்ளிவிவர அமைப்பு இன்றியமையாதது என்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.

மாநிலத் திட்டமிடல், நிதி, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர்கள் மாநாட்டை, மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் புது தில்லியில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய அவர், நம்பகமான புள்ளிவிவரங்கள், தரவு ஒருங்கிணைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். புள்ளிவிவரங்கள், தரவு, தொழில்நுட்பம், திட்டமிடல், நிர்வாகம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த அம்சமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில, மாவட்ட அளவில், வளர்ச்சியை அளவிடவும், கொள்கை சார்ந்த விளைவுகளை மதிப்பிடவும், குறைபாடுகளைக் கண்டறியவும், பொது வளங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், ஒரு வலுவான புள்ளிவிவர அமைப்பு அரசுகளுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322662&reg=3&lang=1 

***

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324059) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Nepali , Gujarati , Kannada