சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இமயமலைப் பகுதியில் உள்ள பூர்வீகக் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 12:30PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஜி பி பந்த் இமயமலை சுற்றுச்சூழல், மேம்பாட்டு சங்கத்தின் 27-வது கூட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அமைச்சகச் செயலாளர் திரு நரேந்திர பூஷன், வனத்துறை தலைமை இயக்குநரும், சிறப்பு செயலாளருமான திரு சந்தோஷ் திவாரி அமைச்சகத்தின் மற்ற உயரதிகாரிகள், ஜி பி பந்த் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் இமயமலைச் சூழல் அமைப்பில் உள்ள பூர்வீக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அதன் பெரும் நலனுக்குப் பங்களிப்பதற்குமான அணுகல், பயன் பகிர்வு உரிமைகள், மக்கள் பல்லுயிர் பதிவேடுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை திரு யாதவ் வலியுறுத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், 2047-ம் ஆண்டிற்குள் இந்திய இமயமலைப் பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், நீடித்த சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் சமநிலைப்படுத்தும் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்குவதில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக திரு யாதவ் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323712®=3&lang=1
***
SS/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2324030)
வருகையாளர் எண்ணிக்கை : 13