பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜிசாட்-7சி தகவல் தொடர்பு செயற்கைக்கோள், வருணாஸ்திரா கனரக டார்பிடோக்களுக்காக ரூ.4,106 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 3:22PM by PIB Chennai

இந்திய விமானப்படைக்கான பிரத்யேக தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7சி, இந்திய கடற்படைக்கான வருணாஸ்திரா கனரக டார்பிடோக்களை கொள்முதல் செய்வதற்காக, ரூ.4,106 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

ஜிசாட்-7சி செயற்கைக்கோளுக்கான ரூ.2,563 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், பெங்களூருவைச் சேர்ந்த நியூ ஸ்பேஸ் இந்தியா  நிறுவனத்துடன் கையெழுத்தானது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், இந்திய விமானப்படையின் மீள்திறன் கொண்ட, தடையற்ற தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தி, அதன் மூலம் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்த உதவிடும்.

வருணாஸ்திராவுக்கான ரூ.1,543 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்தானது. வருணாஸ்திரா என்பது கடற்படை அறிவியல்,  தொழில்நுட்ப ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட, கப்பலில் இருந்து ஏவப்படும் ஒரு உள்நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோ வகையைச் சேர்ந்ததாகும். மேம்பட்டத் திறன்களைக் கொண்டுள்ள இந்தக் கப்பல், நீண்ட தொலைவில் உள்ள எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்டது. இதன்மூலம், இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்த் திறனை இது மேம்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323814&reg=3&lang=1  

***

SS/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2324000) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu