குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு, முன்கூட்டியே கண்டறிதல், சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவை மிகவும் அவசியமானது: குடியரசு துணைத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 5:50PM by PIB Chennai
புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு, முன்கூட்டியே கண்டறிதல், சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் ஆகியவை மிகவும் அவசியமானவை என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர், எழுத்தாளர், முன்னாள் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை அதிகாரி டாக்டர் ஆனந்தா சங்கர் ஜெயந்த் எழுதிய 'டான்சிங் வித் ஜாய்' என்ற உத்வேகம் அளிக்கும் நினைவுக் குறிப்பு நூலை இன்று அவர் வெளியிட்டு உரையாற்றினார்.
இந்நூல் நடனம், மகிழ்ச்சி குறித்த கதையாக மட்டுமின்றி, ஆர்வம், கடின உழைப்பு, மன உறுதி, ஒருவரின் திறமையைக் கண்டறிந்து வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் அசாதாரண வலிமை ஆகியவற்றின் சக்திவாய்ந்த பதிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
புற்றுநோய்க்கு எதிரான டாக்டர் ஆனந்தா சங்கர் ஜெயந்தின் போராட்டப் பயணத்தை விவரிக்கும் இந்நூல், புற்றுநோய் குறித்த தரவுகளுடன், அதனைக் கடந்த வாழ்க்கையை விவரிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வளர்க்கப்பட்ட ஒரு கலை ஆர்வம், வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்களில், வாழ்க்கையின் ஆதாரமாக இருப்பதுடன், துயரங்களை சுயமாகக் கண்டறிதலுக்கான வாய்ப்பாக மாற்றவும் உதவிடும் என்றும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
நடனக் கலைஞர் என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள 'டி' (நடனம்) என்ற எழுத்து, புற்றுநோயைக் குறிக்கும் 'சி' (புற்றுநோய்) என்ற எழுத்தை வெல்ல ஆசிரியருக்கு உதவியது என்று அவர் தெரிவித்தார். பல ஆண்டுகால ஒழுக்கம், கற்றல், அர்ப்பணிப்புடன் வளர்க்கப்பட்ட நடனக் கலை, வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றை எதிர்கொள்வதில் டாக்டர் ஆனந்தாவின் முக்கிய பலமாக அமைந்தது என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323425®=48&lang=2
(Release ID: 2323425)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323489)
வருகையாளர் எண்ணிக்கை : 12