அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தானியங்கி வான்வழி சரக்கு வாகனத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 12:50PM by PIB Chennai
தானியங்கி வான்வழி அமைப்புகள், அடுத்த தலைமுறை சரக்குக் போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்தும் வகையில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், மும்பையைச் சேர்ந்த ஐடியாபோர்ஜ் டெக்னாலஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி, ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க நிதியின் கீழ், ரூ.151 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
மொத்தம் ரூ.302 கோடி மதிப்பிலான இத்திட்டம், கனரகச் சரக்குகளைக் கொண்டு செல்லும் திறன் படைத்த, நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய தானியங்கி வான்வழி வாகனத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம், இதற்கான தொழில்நுட்பத்தை தொழில்நுட்பத் தயார்நிலை நிலை-4 என்பதிலிருந்து நிலை-9-க்கு மேம்படுத்துவதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி கடன் அடிப்படையில் வழங்கப்படும்.
சவாலான செயல்பாட்டுச் சூழல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், செங்குத்தாக மேலே எழும்பித் தரையிறங்குவதுடன், நிலையான இறக்கை கொண்ட கலப்பின ஆளில்லா வான்வழி வாகனமாகும். இது நீண்ட தூரத்திற்கு அதிக எடையுள்ள சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
வழக்கமான போக்குவரத்து முறைகள் கடினமாகவோ, அதிக நேரம் எடுப்பதாகவோ அல்லது செயல்பாட்டு ரீதியாகச் சிக்கலானதாகவோ இருக்கும் பகுதிகளில் சரக்குக் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323134®=3&lang=1
***
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323234)
வருகையாளர் எண்ணிக்கை : 10