குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-26-ம் நிதியாண்டில் ரூ.6,614.40 கோடி மதிப்பிலான தேங்காய் நார்களையும், அது சார்ந்த பொருள்களையும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 10:09AM by PIB Chennai

தேங்காய் நார் உற்பத்தியில் பாரம்பரியத்தையும், புதுமை கண்டுபிடிப்புகளையும் கொண்டுள்ள இந்தியா, உலகின் மிகப்பெரிய தேங்காய் நார் உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது. இத்துறை, தேங்காய் மட்டைகளின் ஆக்கப்பூர்வமான பயன்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமின்றி, வாழ்வாதாரங்களை ஏற்படுத்துவதோடு கிராமப்புற, பாரம்பரிய சமூகங்களின் வளர்ச்சிக்கும் ஆதரவாக உள்ளது. ஸ்திரத்தன்மை, மதிப்புகூட்டல், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மீது வலுவான நோக்கத்துடன் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கையொட்டிய இந்திய பயணத்தில் தேங்காய் நார் உற்பத்தித் துறை முக்கிய பங்களிக்கிறது.

தேங்காய் நார் மூலம் தயாரிக்கப்படும் மிதியடிகள், மெத்தைகள், கயிறுகள், தூரிகைகள், இதர பயன்பாட்டு பொருள்கள் உட்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த தயாரிப்புகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுகின்றன.

தேங்காய் நார் என்பது தேங்காயின் வெளிப்புறத்தில் உள்ள கடினமான மட்டையில் இருந்து பிரிக்கப்படும் இயற்கையான நார் பொருளாகும். இந்த இயற்கை நார்கள் பதப்படுத்தப்பட்டு பல்வேறு வகையான வர்த்தகப் பொருள்களாக மாற்றப்படுகிறது. நாட்டின் மிகப் பழமையான பாரம்பரியத் தொழில்களில் ஒன்றாக உள்ள நார் துறை, தேங்காய் மட்டை நார்களைப் பிரித்தெடுத்து, பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி துறையாக திகழ்கிறது.

தேங்காய் நார் உற்பத்தியைப் பொறுத்தவரை, உலகில் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தியை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 சதவீதம் அளவிற்கு பங்களித்துள்ளது. 2025-26-ம் நிதியாண்டில் அமெரிக்கா, சீனா, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ரூ.6,614.40 கோடி மதிப்பிலான தேங்காய் நார்களையும், அது சார்ந்த பொருள்களையும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323051&reg=3&lang=1

***

TV/IR/SM/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2323150) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati