குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புதுமைக்கண்டுபிடிப்புகளை நடைமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கு அறிவியல் நிறுவனங்களுக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு தேவை - குடியரசுத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 3:58PM by PIB Chennai

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 66-வது பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், பயிற்சி பெறுவோர் ஆகியோரை குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று சந்தித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், பாதுகாப்பும் தொழில்நுட்ப சூழல்களும் விரைவாக மாறி வருவதாகவும் இது புதிய சிக்கலான சவால்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். இத்தகைய மாற்றங்கள் கூடுதல் தயார் நிலை, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய உத்திசார்ந்த அணுகுமுறை, மாறிவரும் சூழலுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்திக்கொள்ளும் திறன் ஆகியவற்றின் அவசியத்தை உணர்த்துவதாக கூறினார். நவீன போர் முறைகள் பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் இணைய பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், ஆகிய துறைகளுக்கு விரிவடைந்துள்ளதால் விரைவாக முடிவு செய்யும் நடைமுறையின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக கூறினார்.

தற்போதைய சூழலில் நாட்டின் பாதுகாப்பு என்பது ராணுவ வலிமைக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். புதுமைக்கண்டுபிடிப்புகளை  நடைமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கு அறிவியல் நிறுவனங்களுக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். புதுமைக்கண்டுபிடிப்புகளுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்துவதில் ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமைக்கண்டுபிடிப்பு திட்டம் போன்ற அரசின் முன்முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

அறிவியல், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நடவடிக்கைகள் என்று பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருவதாக குடியரசுத்தலைவர் கூறினார். நாம் தீர்மானிக்கும் பொறுப்பை இதுபோன்ற தொழில்நுட்பத்திடம் முழுமையாக ஒப்படைக்க முடியாது என்று தெரிவித்தார். இதற்கு சமச்சீரான அணுகுமுறை அவசியம் என்று குறிப்பிட்டார்.

பொருளாதார உறுதித்தன்மை தேசிய பாதுகாப்பு கட்டமைப்பின் ஓர் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322784&reg=3&lang=1

***

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2322933) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , हिन्दी , Gujarati , Malayalam , Bengali , English , Marathi , Assamese