ஜல்சக்தி அமைச்சகம்
தொழிற்சாலைகளின் மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 12:44PM by PIB Chennai
தொழிற்சாலை மாசுபாட்டை குறைத்தல் என்பது ஆறுகளை சீரமைப்பதன் முக்கிய அம்சமாக வளர்ந்து வருகிறது. நமாமி கங்கா திட்டத்தின் கீழ், அதிகளவில் மாசுகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் குறித்த முறையான கணக்கெடுப்பு, வருடாந்திர ஆய்வு, தன்னிச்சையான தொழில்நுட்ப மதிப்பீடுகள், துறை ரீதியான சாசனங்களை அமல்படுத்துதல், பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை கண்காணித்தல், இலக்கு சார்ந்த செயல்திட்டங்கள், தொடர்ச்சியான ஒழுங்குமுறையை கடைப்பிடித்தல் ஆகியவற்றின் மூலம் தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாடு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகள் ஒருங்கிணைந்து தொழிற்சாலை மாசுபாட்டை குறைப்பதற்கும், அதே வேளையில் நீர் மற்றும் வள திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு பொறுப்புடைய, நீடித்த வழிவகையை உருவாக்குகின்றன.
ஒரு முக்கிய நடவடிக்கையாக தேசிய ஒழுங்குமுறை ஆணையமான மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆதரவுடன் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வருடாந்திர ஆய்வு நடைமுறை அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322666®=3&lang=1
***
SS/IR/PS/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322828)
வருகையாளர் எண்ணிக்கை : 7