பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 12:42PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று நடைபெற்ற ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார். திரு மைக்கேல் ப்ளூம்பெர்கின் முந்தைய கருத்துக்களை ஏற்றுக்கொண்ட பிரதமர் இம்மன்றம் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவதைப் பாராட்டினார். பொருளாதாரம், தொழில்நுட்பம், எரிசக்தி, சர்வதேச விவகாரம் உள்பட முக்கிய உலகளாவிய தலைப்புகளில் விவாதிக்க மிகச் சிறந்த சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்கும் தளத்தின் திறன் குறித்து அவர் பாராட்டினார். திரு ப்ளூம்பெர்க்கிற்கும் அவருடைய குழுவினருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்த அவர், உரிய தருணத்தில் உரிய இடத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் உலகளாவிய சக்திகளில் இந்த உச்சி மாநாட்டின் முக்கிய கவனம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 21-ம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். இவற்றில் தொழில்நுட்பம், தரவு, அறிவு, புதுமைக்கண்டுபிடிப்பு ஆகியவை அதிகாரத்தின் முக்கிய அளவுகோல்களாக மாறியுள்ளதாகக் கூறினார். இந்த அதிகாரம் ஒருசிலரை மட்டும் உயர்த்துவதா அல்லது லட்சக்கணக்கானவர்களுக்கு வாய்ப்புகளை ஜனநாயகப்படுத்துவதா என்று கேள்வி எழுப்பிய அவர், அதிகாரத்தின் அடிப்படை நோக்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பார்வையாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன் கட்டுப்பாட்டிலிருந்து வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், போட்டி என்பதிலிருந்து ஒத்துழைப்பிற்கும் மாற வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார். அதிகாரம் அளிப்பதற்கான அதிகாரம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் வெற்றி பெறுவதற்கான அதிகாரத்திற்கு அப்பால், மற்றவர்கள் வெற்றி பெற உதவக்கூடிய அதிகாரத்தை நோக்கிச்செல்ல வேண்டும் என்பதுதான் தமது வருகையின் நோக்கம் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இந்த தத்துவத்தை பழமையான கலாச்சார ஞானத்துடன் இணைத்து விளக்கிய பிரதமர், அறிவு, செல்வம், அதிகாரம் ஆகியவற்றின் உண்மையான மதிப்பு அது எந்த அளவு அறநெறியுடன் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அமைவதாக கூறும் பாரம்பரிய சமஸ்கிருத நூல்களை சுட்டிக்காட்டினார். தற்போதைய சிக்கலான உலகளாவிய சூழலை கையாள அதிகாரத்தின் இந்த ஆழமான நோக்கத்தை புரிந்துகொள்வது மிக அவசியம் என்று வலியுறுத்தினார். அதிகாரத்தின் உண்மையான மதிப்பு அதன் நோக்கத்திலேயே அமைந்துள்ளதாக திரு மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படும் நாட்டின் துடிப்புமிக்க ஆற்றலை வெளிக்கொணரும் வகையில், பரந்த அளவிலான மொழி பன்முகத்தன்மை, 80,000 வெளியீடுகள் 1000-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆகியவற்றை பிரதமர் பெருமையுடன் பட்டியலிட்டார். நவீன சமூக ஊடக காலத்தில், நாட்டின் ஐந்து கோடி யூ டியூப், இன்ஸ்டாகிராம் பயனர்கள் வலுவான, வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் டிஜிட்டல் சக்தி ஜனநாயக உரையாடலுக்கு தீவிரமான சக்தியாக திகழ்கிறது என்பதை இது நிரூபிப்பதாக பிரதமர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322664®=3&lang=1
***
AD/IR/PS/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322798)
வருகையாளர் எண்ணிக்கை : 14