நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைத்து அலுவலகங்களிலும் தூய்மை பணியை முன்னெடுக்கும் பொது நிறுவனங்கள் துறை

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 1:35PM by PIB Chennai

தூய்மைப் பணி, பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்தவகையில், சிறப்புத் தூய்மை இயக்கம் 6 என்ற பெயரில், 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குப்பை சேகரிப்பு, குப்பைகளைத் தரம்பிரிப்பது, மின்னணுக் கழிவுகளை அகற்றுவதே இந்த சிறப்பு இயக்கத்தின் நோக்கமாகும்.

குறிப்பாக, பணியிடங்களைத் தூய்மையாக வைத்திருக்கும் வகையில், அங்குத் தூய்மை பணிகளும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் முகாம்கள் இதுவரை 325 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. தூய்மைப் பணி, நிலுவையில் உள்ள புகார்களுக்குத் தீர்வு, ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்டவைகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், பொது நிறுவனங்கள் துறை இந்தச் சிறப்பு இயக்கத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது.      

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322158&reg=48&lang=1

 ***

SS/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322439) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Assamese