சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா கீலாங்கில் ஐசிஎம்ஆர்-ன் உயரமான மலைப்பகுதி மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2026 2:43PM by PIB Chennai

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா, இமாச்சலப் பிரதேசத்தின் கீலாங்கில், நாளை (2026 அக்டோபர் 12), ஐசிஎம்ஆர் உயரமான மலைப்பகுதி மருத்துவ, பொது சுகாதார ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தியாவின் உயரமான, பருவநிலை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை மையமாகக் கொண்ட பன்முக ஆராய்ச்சி, புத்தாக்கம், திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், இந்த மையம் நிறுவப்படுகிறது.

இமயமலைச் சூழலமைப்பு, அதன் உயரமான மலைப்பகுதி, கடுமையான பருவநிலை, கடினமான நிலப்பரப்பு, புவியியல் ரீதியான ஒதுங்கிய தன்மை போன்ற பொது சுகாதாரச் சவால்கள் இப்பகுதியின் உள்ளன. இந்தக் காரணிகள் நோய்களின் தன்மை, சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல், அவசரகால சகிச்சை ஆகியவற்றில் எதிரொலிக்கின்றன. இந்த சவாலான சூழல்களில் வாழும் மக்களுக்காக, சூழலுக்கு ஏற்ற, சிறந்த சுகாதார ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சிறந்த தீர்வுகளை வழங்குவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321924&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2321990) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Telugu