இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் பாரம்பரிய, மரபுசார் விளையாட்டு நிகழ்வு - அகமதாபாத்தில் வரும் 12-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 10 OCT 2026 11:27AM by PIB Chennai

மத்திய அரசின் இளைஞர் நலன்- விளையாட்டு அமைச்சகம், குஜராத் அரசுடன் இணைந்து, இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், பிரிக்ஸ் பாரம்பரிய, மரபுசார் விளையாட்டு 2026-ஐ, 2026 அக்டோபர் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளன.

 

 மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி, மத்திய இளைஞர் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

இந்தப் போட்டிகள், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டு ஒத்துழைப்பு நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிக் குழுக்களை ஒன்றிணைத்து, பாரம்பரிய, மரபுசார் விளையாட்டுப் நடைமுறைகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது விளையாட்டின் மூலம் கலாச்சாரப் பரிமாற்றம், பாரம்பரியப் பாதுகாப்பு, மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்த வழிவகுக்கும்.

 

போட்டித்தன்மையற்ற ஒரு தளமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு நிகழ்வு, கலாச்சார முக்கியத்துவம், பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல், அறிவுப் பகிர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும். பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து செயல்விளக்கம் அளித்தல், ஆவணப்படுத்துதல், பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.

 

இதில் பங்கேற்கும் நாடுகள் பல்வேறு வகையான பாரம்பரிய,

மரபுசார் விளையாட்டுகள், கலாச்சார நடைமுறைகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321660&reg=3&lang=1

 

(Release ID : 2321660)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321707) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu , Kannada