தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு தழுவிய சிறப்புத் தூய்மை இயக்கத்தை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 5:29PM by PIB Chennai

தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், 2026 அக்டோபர் 2-ம் தேதி முதல் சிறப்பு இயக்கம் 6.0-ஐ தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தில் நாடு முழுவதும் அமைச்சகத்தின் கீழ் உள்ள 610 அலுவலகங்கள் பங்கேற்றுள்ளன. அரசு அலுவலகங்களில் தூய்மையை மேம்படுத்துவதும், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைப்பதும் இந்த இயக்கத்தின் நோக்கமாகும். மின்னணுக் கழிவுகளைத் திறம்படச் சேகரித்தல், தரம் பிரித்தல், அகற்றுதல் ஆகியவற்றுக்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ஆயத்தக் கட்டத்தின் போது மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அமைச்சகத்தின் கீழ்மட்டப் பிரிவு வரையிலான ஒவ்வொரு அலுவலகத்தையும் இந்த இயக்கம் சென்றடைய வகை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த இயக்கம் 2026 அக்டோபர் 31-ம் தேதியைக் கடந்தும் தொடர வேண்டும் என்றும், இது ஆண்டு முழுவதும் நடைபெறும் இயக்கமாக மாற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321416&reg=3&lang=1

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321532) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Telugu , Malayalam