பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 4:56PM by PIB Chennai

அரசின் தலைமைப் பொறுப்பில், தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்தவர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையை அக்டோபர் 7, 2026 அன்று எட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2001-ல், குஜராத் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றது முதல், 2014-ல் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றது வரை, அவரது 25 ஆண்டுகாலப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள், மாற்றத்தை உருவாக்கும் அவரது தலைமைப் பண்பு, நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பு, உலக அமைதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான மேம்பாடு ஆகியவற்றின் மீதான அவரது உறுதியான நிலைப்பாடு போன்ற அம்சங்களை குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நமது காலத்தில் வாழும் ஒரு அவதார புருஷர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

நைஜீரிய அதிபர் திரு போலா அகமது டினுபு, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு விடுத்துள்ள செய்தியில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளதற்காக எனது அன்பான, சகோதரத்துவமிக்க வாழ்த்துகளை நைஜீரியக் கூட்டாட்சிக் குடியரசு, மக்கள் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 25 ஆண்டுகளில், பிரதமர் மோடி தொலைநோக்குப் பார்வையுடனும், வளர்ச்சியின் மீதான உறுதியான அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறார். குஜராத் மாநிலத்தின் மாற்றத்திலிருந்து தொடங்கி, உலகின் மிகப்பெரிய, மிக விரைவாக வளர்ச்சி கண்டு வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது வரை, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொதுச் சேவைகள், நிதிச் சேர்க்கை, புத்தாக்கம் ஆகியவற்றில் அவரது தலைமைத்துவம், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளதுடன், வளரும் நாடுகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320201&reg=3&lang=1  

***

(Release ID: 2320201)

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321074) வருகையாளர் எண்ணிக்கை : 3