நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதிச் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்த விவாதத்திற்குப் பிறகு, இந்தியா-இங்கிலாந்து இடையேயான கூட்டறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 5:21PM by PIB Chennai

இந்தியா-இங்கிலாந்து நாடுகளிடையேயான நிதிச் சந்தைகள் குறித்த நான்காவது கலந்துரையாடல் நிகழ்ச்சி 2026 செப்டம்பர் 29 அன்று லண்டனில் நடைபெற்றது.

மத்திய நிதி அமைச்சகம், இங்கிலாந்தின் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த விவாதத்தில், இவ்விரு நாடுகளின் நிதிச் சேவை ஒழுங்குமுறை அமைப்புகளான இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), இந்திய ரிசர்வ் வங்கி, சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையம், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையம், இங்கிலாந்து வங்கி மற்றும் நிதிச்  செயல்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றன.

டிசம்பர் 2024-ல் நடைபெற்ற முந்தைய கூட்டத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த கண்ணோட்டத்துடன், இந்த விவாதம் தொடங்கியது.

பங்கேற்பாளர்கள் தங்களது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

 மேலும், நீடித்தப் பொருளாதார வளர்ச்சி, வலுவான, வெளிப்படையான நிதிச் சந்தை செயல்பாடுகள், இருதரப்பு வர்த்தகம், முதலீட்டை அதிகரித்தல் ஆகியவற்றில் இரு நாடுகளின் ஒருங்கிணைந்த நோக்கத்தை மீண்டும் உறுதி செய்தனர். மூலதனச் சந்தைகள், காப்பீடு, ஓய்வூதியம், சொத்து மேலாண்மை, நிதித் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த விவாதங்களும்  நடைபெற்றன.

இந்த விவாதத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320225&reg=3&lang=1   

----

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321068) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Malayalam