கலாசாரத்துறை அமைச்சகம்
பிரதமரின் நினைவுப் பொருட்களுக்கான மின்னணு ஏலத்தில், சிக்கிம் மாநில கலாச்சார, பாரம்பரிய பொருட்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 5:44PM by PIB Chennai
நமாமி கங்கை திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன், பிரதமரின் நினைவுப் பொருட்களுக்கான மின்னணு ஏலத்தின் 8-வது பதிப்பு, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார பாரம்பரியத்துடன் இணையவும், அதன் ஒரு பகுதியைச் சொந்தமாக்கிக்கொள்ளவும் மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
ஏலத்திற்கு வந்துள்ள நினைவுப் பொருட்களில், சிக்கிம் மாநிலத்தின் தனித்துவக் கலைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இரண்டு சிறப்பான கலைப்பொருட்களும் அடங்கும். இந்தக் கலைப்பொருட்கள் ஏலத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம், சிக்கிம் மாநிலத்தின் பாரம்பரியம், தேசிய அளவில் முன்னிறுத்தப்படுகிறது. ஒரு காலத்தில், சடங்கு ரீதியான பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்த பொருட்கள், தற்போது மக்கள், கலைப்பொருள் சேகரிப்பாளர்களுடன் ஒரு புதிய பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றன.
இந்த மின்னணு ஏலத்தில் இடம் பெற்றுள்ள பொருட்களில் ஒன்று, சிக்கிம் மாநில ஆளுநரால் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பரிசளிக்கப்பட்ட, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட புத்தரின் பித்தளை உலோகச் சிலையாகும். இரண்டாவது கலைப்பொருள், இமயமலையையொட்டி அமைந்துள்ள மாநிலத்தின் கலை, ஆன்மீக விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், புனிதமான ஓம் மணி பத்மே ஹும் என்ற மந்திரம் பொறிக்கப்பட்ட திபெத் நாட்டைச் சேர்ந்த பௌத்த வழிபாட்டுச் சக்கரம் (அல்லது 'மணி கோர்லோ') ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319721®=3&lang=1
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320917)
வருகையாளர் எண்ணிக்கை : 4