பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த பெல்ஜிய பிரதமர் திரு பார்ட் டி வெவர்-க்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 8:58PM by PIB Chennai

பெல்ஜியம் பிரதமர் திரு பார்ட் டி வெவர் வெளியிட்ட வாழ்த்துப் பதிவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்திய-பெல்ஜியம் உறவுகளில் ஏற்பட்டுள்ள நேர்மறையான முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்தவும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தனது உறுதிப்பாட்டை திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“பிரதமர் திரு பார்ட் டி வெவர் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

நமது உறவுகளில் ஏற்பட்டுள்ள நேர்மறையான முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்தவும், நமது இருதரப்பு கூட்டாண்மையை இன்னும் வலுப்படுத்தவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.

@Bart_DeWever”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320408&reg=3&lang=1   

***

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2320856) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam