தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நான்கு திரைப்படங்கள் அறிமுகம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 7:03PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவு சார்ந்த படைப்பாற்றல் திட்டங்களை ஆதரிப்பதற்கும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துவதற்கும் நவம்பர் 2025-ல் அறிவிக்கப்பட்ட 'செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்குதல்' திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்பங்கள் கழகமும் (ஐஐசிடி) யூடியூப் தளமும் எட்டியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் நான்கு குறும்படங்களை இத்திட்டம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த திரைப்படத் தயாரிப்பில் இந்தியாவை உலகளவில் முன்னிலைப்படுத்தக்கூடிய ஒரு சூழலியலை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

 

மும்பையில் உள்ள ஐஐசிடி திரையரங்கில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட செகாவர், சாணக்யா- ஒரு பேரரசின் மனம், தேவி: ஒன்பது அஸ்திரங்கள், லைக்கா ஆகிய நான்கு திரைப்படங்களும், அதே நேரத்தில் யூடியூப் சேனல்களிலும் வெளியிடப்பட்டன. வரலாறு, பாரம்பரியம், மனித உணர்வுகள், விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களையும் கதை சொல்லும் முறைகளையும் உள்ளடக்கிய இந்தத் திரைப்படங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த திரைப்படத் தயாரிப்பின் ஆக்கப்பூர்வமான சாத்தியக்கூறுகளையும் வெளிப்படுத்துகின்றன.

 

'செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்குதல்’ திட்டம், கூகுள், யூடியூபின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், ஐஐசிடி-ன் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றைத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் கற்பனைத் திறனுடன் ஒன்றிணைக்கும் ஒரு செயல்முறைப் பரிசோதனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320332&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2320436) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Telugu , Malayalam