நிதி அமைச்சகம்
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில், தங்கக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில், 8.3 கிலோ வெளிநாட்டுத் தங்கம் பறிமுதல்
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 8:47PM by PIB Chennai
சட்டவிரோதமாக தங்கக் கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இந்தியா-பங்களாதேஷ் எல்லைப் பகுதியில், ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில், ரூ 12.37 கோடி மதிப்பிலான 8.3 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது.
இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சௌத்ரிஹத் எல்லைப் பகுதியிலிருந்து கூச் பெஹார் நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு நபர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டபோது, அவர்களிடமிருந்து பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட துணி இடுப்புப் பட்டைகளில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட நான்கு நபர்களிடமிருந்தும் மொத்தம் 72 தங்கக் கட்டிகள் (ஒவ்வொன்றும் 116 கிராம் எடை கொண்டவை) பறிமுதல் செய்யப்பட்டன. 8.3 கிலோ எடையுள்ள, ரூ 12.37 கோடி மதிப்பிலான இந்த வெளிநாட்டுத் தங்கம், 1962-ம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதில் ஈடுபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319832®=3&lang=1
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320343)
வருகையாளர் எண்ணிக்கை : 11
வெளியீடுகளுக்கான பின்னணி குறிப்புதவி