பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

10-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை அக்டோபர் 8 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 12:45PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள யசோபூமியில் 10-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை அக்டோபர் 8 அன்று காலை 10 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அப்போது, அங்கு கூடியிருப்பவர்களுக்கிடையே அவர் உரையாற்ற உள்ளார்.

தொலைதொடர்புத் துறையும், இந்தியா செல்லுலார் செயல்பாட்டாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வு அக்டோபர் 10 வரை நடைபெறுகிறது. எல்லைகள் இல்லா விரிவாக்கம் என்ற கருப்பொருளில் இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு 2026 நடைபெற உள்ளது. இது டிஜிட்டல் புதுமை கண்டுபிடிப்பு, அடுத்த தலைமுறைக்கான இணைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ச்சியடைந்து வரும் திறன்களைப் பிரதிபலிக்கிறது.

எதிர்காலத்தைக் கட்டமைத்தல், வளர்ச்சியை ஊக்குவித்தல், வாய்ப்புகளை விரிவாக்குதல், நம்பிக்கையை வலுப்படுத்துதல் ஆகியவை இம்மாநாட்டின் நான்கு முக்கிய அம்சங்களாகும். இது புதுமை கண்டுபிடிப்பு, அடுத்த தலைமுறை டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் அணுகல், பாதுகாப்பான, உறுதியான டிஜிட்டல் சூழல் அமைப்புகளின் மேம்பாடு ஆகியவற்றின் கவனம் செலுத்தும். டிஜிட்டல் சூழலில் உருவாகும் வாய்ப்புகளை ஆராய்வதற்கு உலகளாவிய தொழில்நுட்ப தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், துறைசார்ந்த நிபுணர்கள், புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை இம்மாநாடு ஒருங்கிணைக்கும்.

5ஜி, 6ஜி, அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகள், செமி கண்டக்டர்கள், புவிசாராத கட்டமைப்புகள், இணையப் பாதுகாப்பு, குவாண்டம் தகவல் தொடர்பு, சுழற்சி பொருளாதாரம், மின்னணு உற்பத்தி உள்ளிட்ட துறைகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

இதில்  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,50,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319977&reg=3&lang=1

***

TV/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2320317) வருகையாளர் எண்ணிக்கை : 8