இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி: நாடு தழுவிய விநாடி-வினா போட்டி
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 5:22PM by PIB Chennai
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் 'எனது இளம் இந்தியா’ (மை பாரத்) தளத்தின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய முன்முயற்சியான 'வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2027’, வளர்ச்சியடைந்த இந்தியா வினாடி-வினா போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து இதற்கு அமோக வரவேற்பு கிடைத்ததுடன், தேர்வுச் செயல்முறையின் போது மொத்தம் 1,45,26,013 பங்கேற்புகள் பதிவாகின.
வினாடி-வினா சுற்றில் தேர்ச்சி பெற்ற சுமார் 5.7 லட்சம் இளைஞர்கள், அடுத்த கட்டமான கட்டுரைப் போட்டிக்கு முன்னேறி, தங்கள் பிராந்தியத்திற்குரிய தலைப்பில் 500 சொற்கள் கொண்ட கட்டுரையை 'மை பாரத்' இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319695®=3&lang=1
----
TV/BR/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2320222)
வருகையாளர் எண்ணிக்கை : 10