சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடும் சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 8:17AM by PIB Chennai
ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, துருக்கியில் உள்ள ஆண்டால்யாவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதன் முன்னோட்டமாக, பிஜியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிஜி, துவாலு ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல் வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் பங்கேற்றார். இதில், பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ், துவாலு நாட்டு மக்கள், பருவநிலை மாற்றத்தின் சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு முன்மாதிரியாக விளங்குகிறார்கள் என புகழாரம் சூட்டினார். பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தை தொலைநோக்கு பார்வையுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். சர்வதேச அளவில் வெப்பநிலையானது சராசரி அளவைவிட 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் புபேந்தர் யாதவ், வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டமானது துருக்கியில் நடைபெறவுள்ள ஐநா பருவநிலை மாநாட்டிற்கு முன்னோட்டமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319890®=3&lang=1
***
TV/LN/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2320153)
வருகையாளர் எண்ணிக்கை : 9