பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேம்படுத்தப்பட்ட பாராசூட் மூலம் 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 4:11PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மேம்படுத்தப்பட்ட நவீன பாராசூட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாராசூட்டின் சோதனை நிகழ்வு, லடாக்கில் உள்ள நியோமா பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து இந்த பாராசூட் மூலம் கீழே குதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய குழுவினருக்கு பாதுகாப்புதுறை செயலாளர் ராஜேஷ்குமார் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்த நவீன பாராசூட், இந்திய விமான படைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319589&reg=3&lang=1&_gl=1*1ya8exp*_up*MQ..*_ga*MTIwMDA2NjE3Mi4xNzkxMjg1MzQ0*_ga_Q414Y0X6EE*czE3OTEyODUzNDMkbzEkZzAkdDE3OTEyODUzNDMkajYwJGwwJGgw*_ga_QJJ6LZ8LHV*czE3OTEyODUzNDMkbzEkZzAkdDE3OTEyODUzNDMkajYwJGwwJGgw

 

***

TV/LN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2319973) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu