மாநிலங்களவைச் செயலகம்
தான்சானியாவில் நடைபெறும் 153-வது சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தொடரில், இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு பங்கேற்றுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 1:03PM by PIB Chennai
தான்சானியாவின் அருஷாவில் நடைபெறும் 153-வது சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தொடரில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு பங்கேற்றுள்ளது.
முதல் நாளான அக்டோபர் 5 அன்று, மக்களவை உறுப்பினர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் சுகாதாரக் குழு அமர்வுகளில் பங்கேற்றார். ஆசிய-பசிபிக் புவிசார் அரசியல் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர் திருமதி அபராஜிதா சாரங்கி, நிர்வாகக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றக் கூட்டத்தில், திருமதி கமல்ஜீத் செஹ்ராவத் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள், உள்ளடக்கிய வளர்ச்சி குறித்தும், திருமதி பிஜுலி கலிதா மேதி மகளிர் தலைமைத்துவம் குறித்தும் உரையாற்றினர். மேலும், டாக்டர் சஸ்மித் பத்ரா ஆசிய நாடாளுமன்றக் கூட்டத்திலும், திருமதி லதா வான்கடே பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டனர்.
திரு. ஹரிவன்ஷ் தலைமையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற சபாநாயகர் மில்டன் டிக், தான்சானிய நாடாளுமன்ற சபாநாயகர் மூசா அஸ்ஸான் சுங்கு ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319486®=3&lang=1
***
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2319769)
வருகையாளர் எண்ணிக்கை : 8