மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

சிறு, நடுத்தர நிறுவனங்களில் நேரடிப் பங்கு முதலீடுகளுக்காக சிறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சி நிதியை ஏற்படுத்த ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 3:12PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சிறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சி நிதியை அமைப்பதற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்ய இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் 28-வது பத்தியில் குறிப்பிட்டபடி, நாட்டின் சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கு வளர்ச்சி சார்ந்த மூலதனத்தை ஊக்குவிப்பதையும், உற்பத்தி, சேவைகள், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட துறைகளில் இந்திய நிறுவனங்களைச் சாதனையாளர்களாக திகழச் செய்வதையும் இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்குத் தேவையானப் பங்கு மூலதனம், நிதி, தொழில்முறை ஆதரவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2026-27-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட விரிவான அறிவிப்புகளின் ஒரு பகுதியாக இது இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே, பங்கு மூலதன ஆதரவை வழங்கக் கூடிய நிதிகள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சி சார்ந்த பங்கு மூலதனத்தில் ஒரு இடைவெளி காணப்படுகிறது.

இந்த முன்முயற்சியானது, நாட்டின் தொழில்முனைவோர் சூழலை வலுப்படுத்துதல், வளர்ச்சி நிலையில் உள்ள நிறுவனங்களுக்கான உள்நாட்டு மூலதன சந்தையை வலுப்படுத்துதல், உலக அளவில் போட்டியிடக்கூடிய புதிய தலைமுறையினரின் நிறுவனங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319532&reg=3&lang=1&_gl=1*cnrqw1*_up*MQ..*_ga*MjkzNjI4MTM5LjE3OTEyODAwOTQ.*_ga_Q414Y0X6EE*czE3OTEyODAwOTMkbzEkZzAkdDE3OTEyODAwOTMkajYwJGwwJGgw*_ga_QJJ6LZ8LHV*czE3OTEyODAwOTMkbzEkZzAkdDE3OTEyODAwOTMkajYwJGwwJGgw

***

TV/IR/SM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2319683) வருகையாளர் எண்ணிக்கை : 9