இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 3:00PM by PIB Chennai
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் 'மேரா யுவ பாரத் எனப்படும் மை பாரத் தளத்தில் ( mybharat.gov.in/ ), 3 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பதிவுசெய்துள்ளதன் மூலம் ஒரு மைல்கல் சாதனை எட்டப்பட்டுள்ளது. இந்தச் சாதனை, இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. இது இளைஞர்களுக்கு அனுபவக் கற்றல், தன்னார்வத் தொண்டு, தலைமைத்துவம், குடிமை ஈடுபாடு, இளைஞர்களால் வழிநடத்தப்படும் முயற்சிகளில் பங்கேற்பது ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
2023 அக்டோபர் 31 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட 'மை பாரத்', இளம் இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க உதவும் ஒரு தொழில்நுட்ப அடிப்படையிலான தளத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நிறுவப்பட்டது. இந்தியாவின் இளைஞர்களின் ஆற்றல், எதிர்பார்ப்புகள், திறன்கள் ஆகியவற்றை, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மை பாரத் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் பயணம் விரைவான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. இந்தத் தளம் அக்டோபர் 2025-ல் 2 கோடிக்கும் அதிகமான பதிவுகளைத் தாண்டியது, அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2026-க்குள் 2.46 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பதிவு செய்தனர். அதன் விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்தில் 3 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையைத் தாண்டுவது, இந்தத் தளத்தில் இளைஞர்களின் பங்கேற்பு தொடர்ந்து வளர்ந்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313871®=3&lang=1
***
TV/PLM/RJ